உள்நாடு

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து மூன்று மாதங்களுக்குள் அவற்றை பெற முடியும் அல்லது பிறப்பு, இறப்பு பதிவான பிரதேச செயலகத்தில் அவற்றை பதிவு செய்துக்கொள்ள முடியும்.

இறப்பு தொடர்பான பதிவு நடவடிக்கைகள் இறந்தவரின் இறுதி சடங்கிற்கு முன்னதாக பெற்று கொடுக்குமாறு அனைத்து உள்ளுராட்சி சபை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பல்வேறு தொலைப்பேசி இலக்கங்களையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

என்.சி விதானகே, பதிவாளர் நாயகம் – 0701 588 433

புபுதிகா எஸ்.பண்டார சிரேஸ்ட பிரதி பதிவாளர் நாயகம் (நிர்வாகம்) – 0713 483 238

சி.எஸ்.ஜாகொட ஆராச்சி உதவி பதிவாளர் நாயகம் – 0714 485 564

சமன் திசாநாயக்க உதவி பதிவாளர் நாயகம் – 0703 899 535

Related posts

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி