உள்நாடுசூடான செய்திகள் 1

வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பாக அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியையும் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து அரச, அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இதன் கீழ் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை வலுப்படுத்துவதற்காக வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

நாமல் மீதான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம் : ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்தவுக்கு 19ஆம் திகதி அழைப்பு

ரஷ்ய தூதுவரை சந்திக்க தயாராகும் 10 சுயேட்சைக் கட்சிகள்