(UTV | கொழும்பு ) – இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக சீனா இன்று விமானம் மூலம் இலங்கைக்கு மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள உதவியில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன.
மேலும் நாளை மறுதினம் மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க இருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது
மேலும் அமெரிக்கா 1.3 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல், தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுதல், அடையாளம் காணப்பட்டவர்களை கண்காணித்தல், தொழில்நுட்ப அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய செயற்பாடுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.