(UTV|சீனா) – உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனா பரவல் தொடங்கிய வுஹான் நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சீனாவின் வுஹான் நகரின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுடன், இரண்டு மாத காலத்துக்கும் மேலாக எந்தவிதமான போக்குவரத்துத் தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இன்று, சில போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், அந்த நகரில் உள்ளூர் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவை மீண்டும் சிறிய அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனவால் இதுவரை 3300 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.