(UTV|கொழும்பு) – 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும் நேட்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஐ.ஓ.சி. ( சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்வதாக இருந்தனர். இதில் 57 சதவீதம் பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றிருந்தனர்.