உள்நாடு

முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கக்கடியினை தொடர்ந்து முறையற்ற வகையில் சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்குமாறு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

சிறுவர் இல்லங்களில் வசிக்கும் சிறுவர்களிடம் முறையற்ற விதத்தில் செல்வதையும், அவர்களது புகைப்படங்களை வெளியிடுதல் மற்றும் அவர்களது கருத்துக்களை பெறுதல் போன்ற நடவடிக்கையினையும் தவிர்க்குமாறு, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

மேலும் இது தொடர்பில் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில், சிறுவர் இல்லங்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களைப் பாராட்டுவதாகவும், நாட்டில் 400 சிறுவர் இல்லங்களில் சுமார் 11,500 சிறுவர்கள் உள்ளதாகவும் இந்தச் சிறார்களுக்கு உதவுவதற்காக வரும் வெளிநபர்கள் சிறுவர் இல்லங்களுக்குள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அது சிறுவர்களுக்கு சுகாதார ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அச்சமுள்ளது எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அங்கு வெளிநபர்களின் வருகை காரணமாக தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களையும், ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் சதொசவின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய உதவிகள் அல்லது நன்கொடைகளை வழங்க விரும்பும் பட்சத்தில் அதுகுறித்து மாகாண சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும் எனவும், அதனூடாகவே குறித்த உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண ஆணையாளர் – தாமரிகா (071 4404107)

மத்திய மாகாண ஆணையாளர் – சித்திகா (071 8000660)

தென்மாகாண ஆணையாளர் – மகேஷ் (071 4902800)

ஊவா மாகாண ஆணையாளர் – பிரியபாதினி (071 8079063)

சப்ரகமுவ மாகாண ஆணையாளர் – சுசிலா (071 8738962)

வடமேல் மாகாண ஆணையாளர் – பிரேமசிறி (071 4560326)

வடமத்திய மாகாண ஆணையாளர் – ராஜபக்ஷ (071 4410389)

வடமாகாண ஆணையாளர் – குருபரன் (077 8612229)

கிழக்கு மாகாணம் – ரஷ்வனி (077 9285825)

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவிப்பு

“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்” – புத்தளத்தில் தலைவர் ரிஷாட்!

editor

77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor