உள்நாடுவிளையாட்டு

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

(UTVNEWS | COLOMBO) -வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ​நேற்று (27) வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிதியுதவியினை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கொழும்பில் அமைந்துள்ள பத்தரமுல்லையிலுள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் மக்களும் அன்றாட உணவுப்பொருட்களுக்கும் மற்றும் நாளாந்தம் தொழிலுக்கு செல்லும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் வகையில் பெருமளவு சிரமப்பட்டுகின்றனர்.

அதன் காரணமாக எமது கிரிக்கெட் நண்பர்களின் மூலமாக இந்த பணம் சேகரிக்கப்பட்டு இந்த நிதியினை கையளித்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டன.

Related posts

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை