உள்நாடு

சட்டவிரோத மதுபான உற்பத்தி : சந்தேக நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர் அநுராதபுரம் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 750 மில்லிலீற்றர் 14 போத்தல்களுடன் அநுராதபுரம் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் நேற்று (27)  கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த மதுபான உற்பத்தி நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களத்தின் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் அரசியல்வாதிகளின் மெளனம் : கல்முனையில் வலுக்கும் போராட்டம் : அரச ஊழியர்கள் இணைவு

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு