(UTVNEWS | COLOMBO) –2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.