உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைது

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 98 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 416 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor