(UTV| கொழும்பு) – உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஐ.டீ.ஏ (IDA) நாடுகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதால் உலக சன தொகையில் நான்கில் ஒரு பகுதியும், உலக சன தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஒன்றிணைந்து கடன் வழங்கிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி IDA நாடுகளிடமிருந்து கடன்களை வசுலிப்பதை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
பொலிவியா, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நிலைமையில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், ஆனப்படியால் இலங்கையை தொடர்ந்தும் IDA நாடாக கருத முடியாது என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன கருதுகின்றன
ஆனால் 2018 முதல் 2020 வரை இந்த நாடுகள் விசேட அடிப்படையில் குறிப்பிட்ட சில சலுகைகளை பெற்றுள்ளன.