விளையாட்டு

ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

(UTV| இந்தியா) – தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது

படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்றி கொள்ளலாம் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம், பெங்கால் கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது.

இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

 

Related posts

அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர்

மெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகால போட்டித்தடை

ஷிகார் தவான் உள்ளிட்ட 21 பேர், 28ம் திகதி இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு