உலகம்

தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் – ராணி

(UTV|மலேசியா )- அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மலேசியாவில் தற்போது 2,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை யடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related posts

அல்-ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூடிய இஸ்ரேல்!

எதிர்க்கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவு – ட்ரம்ப் அதிரடி

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து