உள்நாடு

விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுண்ணுயிரியலாளர் ஒருவரின் கூற்றுப்படி, நோயாளிகளின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் வைத்தியர்களுக்கு முகக் கவசங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் N95 முகக்கவசங்களை சாதாரண பொதுமக்களும் பயன்படுத்துவதால், இதற்கான பற்றாக்குறை நிலவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள காணொளியில், இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில் தேவையற்ற N95 மற்றும் பிற முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என நேற்றைய தினம் (26) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர், அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு