உள்நாடு

அடுத்த இருவாரம் முக்கியமானது

(UTVNEWS | COLOMBO) –அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்காக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் ஊடகவியளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம். இந்த இரண்டு வாரகாலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். முடிந்தளவு தனிப்பட்ட முறையில் மக்கள் தம்மை பாதுகாத்துகொள்ள வேண்டும். வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதே இவ்வாறான சூழலில் மக்கள் தம்மை பாதுகாக்க முடிந்த சிறந்த செயற்பாடாகும். என மேலும் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

editor

மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பேக்கரி தொழில் பாதிப்பு