(UTVNEWS | சுவிட்சர்லாந்து ) – கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கருத்து தெரிவிக்கையில்
‘கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.
கொரோனா வைரசை ஒழிக்க அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்’. என தெரிவித்துள்ளார்