உள்நாடு

பிரதமர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் பற்றி போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில்இ போலித் தகவல்களை சமூகமயப்படுத்த முயன்று வருவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.

எந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில்இ அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் கவலைக்கிடமானதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தீர்மானம் மிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்