உள்நாடு

சந்தா கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) –பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தமது சங்கத்தின் அங்கத்தவர்களிடமிருந்து சந்தாப்பணம் அறவிடவேண்டாம் என கம்பனிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக காரியாலயத்தில் இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts

நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு