(UTVNEWS | COLOMBO) -சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும்இ பாதிக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன்இ அவற்றில் 10 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டவை ஆகும்.
ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் ஆகும்.
எனவே ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொறுப்புடன், பாதுகாப்பாகவும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.