(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 201 பேர் வரையில் இன்று (25) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களது வீடுகளுக்கு நேற்று (24) அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.