(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 959 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 18 ஆயிரத்து 907பேர் உயிரிழந்துள்ளதுடன்
மேலும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 743 பேர் உயிரிழந்துள்ளனர். .
கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-
சீனா – 3,281
இத்தாலி – 6,820
அமெரிக்கா – 782
ஸ்பெயின் -2,991
ஜெர்மனி – 157
ஈரான் – 1,934
பிரான்ஸ் – 1,100
சுவிஸ்சர்லாந்து – 122
தென்கொரியா – 120
இங்கிலாந்து – 422
நெதர்லாந்து – 276
பெல்ஜியம் – 122
ஜப்பான் – 43
பிரேசில் – 46