உலகம்

கொரோனா வைரஸ்; 16 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தற்போது உலகின் 185 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 16 ஆயிரத்து 578 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 இலட்சத்து 82 ஆயிரத்து 568 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 522 பேர் சிகிச்சைக்கு பின் வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று மட்டும் அதிக அளவாக 601 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

‘கூடிய விரைவில் போரை நிறுத்துவோம்’ – புடின்

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தியமைக்கவேண்டும் – சர்வதேச ஆணைக்குழு.