உலகம்சூடான செய்திகள் 1

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

(UTVNEWS | INDIA) -திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில்  நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி  கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் இந்த நால்வரும் குற்றவாளிகள்  என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்த வண்ணம் இருந்ததால் அவர்களை தூக்கிலிடும் ந்அடைமுறை 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா, குற்றவாளிகள் 4 பேரையும் 20ஆம் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு கடந்த 5ஆம் திகதியன்று உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை