உலகம்

கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

(UTV|சீனா )- சீனா ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரசால் பலியானதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை

இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 வருட சிறை!