உள்நாடுகேளிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி

(UTV|கொழும்பு) – பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளுக்கான கட்டணமாக சுமார் 6000 ரூபா அறவிடப்படும் என்பதுடன், தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த ‘யூத் போரம்- 2024’ நிகழ்வு

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவு