உலகம்

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது

(UTV|இந்தியா ) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு அதிகளவானவர்கள் வந்து செல்வது வழக்கமாகும்.இதனால் அதிகளவானவர்கள் ஒன்று கூடும் போது நோய் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணாமாக இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் உள்ள பாடசாலை, கல்லூரிகள் விடுமுறை, திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மக்கள் யாரும் பொது இடங்களில் ஓன்று கூட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல உலக அதிசயங்களில் முக்கியமானதும், இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் இம்மாதம் இறுதி வரை மூடப்பட்டு, அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் நீதி அமைச்சர் இராஜினாமா

டிக்டாக் மீதான தடையை நீக்க அனுமதி

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.