(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் என்பதோடு இந்த உத்தரவிற்கு இணங்காதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்படும் சட்டத்திற்கமைய நீதிமன்ற நடவடிக்கை எடக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.