உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு [UPDATE]

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

————————————————————————————————————————–[UPDATE]

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் இன்று(17) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக அந்த செயற்பாடு இன்றைய தினம் வரை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 6, 8, மற்றும் 9 தினங்களில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு நாளை மறுதினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Related posts

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு

லிட்ரோ எரிவாயு விலை குறித்து சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள் பதிவு