வணிகம்

விசேட கடன் சலுகை – இலங்கை மத்திய வங்கி

(UTV|கொழும்பு) – நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகையினை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு விசேட கடன் சலுகையினை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய அரச மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இந்த விசேட கடன் சலுகை வழங்கப்படவுள்ளது.

இதன்படி நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்தொகையினை செலுத்த முடியாத நபர்கள் இது தொடர்பில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக இலங்கை மத்தியவங்கியிடம் அறியத்தர வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.

கடன் ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டவர்கள் சொத்து கையகப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மற்றம் நிதி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு குறித்த சலுகை வழங்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனிதவள பயிற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம்

மத்தள வரும் விமானங்களுக்கு சலுகை

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்