(UTV|கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொது மற்றும் வங்கி விடுமுறையாக, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அரச மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை வர்த்தக விடுமுறையாகவும் வழங்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் அனைத்து சில்லறை விற்பனை நிலையம் மொத்த விற்பனை நிலையம் ஆகியன கட்டாயமாக திறந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், தேவை ஏற்படும்பட்சத்தில் அரச விடுமுறை நீடிக்கப்படலாம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.