உள்நாடு

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

(UTV|கொழும்பு) – நாளை(16) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அறிவித்தபடி மார்ச் மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்களில் அலுவலக நேரங்களிலும் மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணத்தை செலுத்த முடியும். இதனுடன் வேட்பு மனுக்களையும் கைளிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுக்கும் பிரதி / துனை தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

இலங்கையில் 20 வது கொரோனா மரணம் பதிவானது

தேவை ஏற்பட்டால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் – அமைச்சர் டிரான் அலஸ்

editor