கேளிக்கை

கொரோனா வைரஸ் – பிரபல நடிகையின் திருமண நிகழ்ச்சி ஒத்திவைப்பு

(UTV|இந்தியா ) – நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாக மலையாள நடிகை உத்தரா உன்னி தெரிவித்துள்ளார்.

வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள்.

மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு

விருமன் படம் புரிந்த சாதனை

அனிஷாவின் மேல் காதல் மலர இதுவே காரணம்…