கிசு கிசு

கொரோனா பரப்பியது யார் தெரியுமா?; அதிர்ச்சி தகவல் (VIDEO)

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அக் குற்றச்சாட்டில் உலக முழுதும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்க இராணுவம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸோ லிஜியான் அமெரிக்க இராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரவ வைத்துள்ளது என்று கூறி உள்ளார்.

சீனாவில் இருக்கும் சமூகவலைதளங்களில் இதுப்போன்ற செய்தி பரவி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அதிகாரி இதுப்போன்று கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதித்துள்ளது? எந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்? இந்த வைரஸை ஊஹானுக்கு அமெரிக்க ராணுவம்தான் கொண்டு வந்திருக்கும், வெளிப்படையாக இருங்கள்.

உங்களது தகவல்களை வெளி உலகுக்குத் தெரிவியுங்கள். அமெரிக்கா இதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும்

 

குறித்த கருத்தால் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

‘சிறையில் என்ன நடக்க வேண்டும்’ – ரஞ்சன்

நாய்-பூனை கறிகளுக்கு தடை- மீறினால் 3 லட்சம் அபராதம்

சச்சின் வைத்தியசாலையில் அனுமதி