(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான அனுமதியை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்க்ள் சக்தி சட்டரீதியிலான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் செல்லுபடியற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியின் பிரகாரமே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31ல் ஒன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இதற்கான அனுமதி சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டது.
அதே போன்று இந்த கூட்டமைப்பை ஒரு சிலர் அரசியல் கட்சியாக சித்தரிக்கின்றார்கள். இது பொருத்தமற்ற ஒரு விடயம். நாம் கூட்டமைப்பொன்றினையே ஏற்படுத்தியுள்ளோம்.
அதே போன்று எம்மோடு ஐக்கிய தேசிய கட்சி உட்பட வேறு சில முக்கிய கட்சிகளும் இணைந்துள்ளன.
இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்ள் சக்தியின் ஊடாக தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
நாம் யானையை நேசிக்கின்றோம் ஆனால் மக்கள் தொடர்ச்சியாக யானையை ஏன் தட்டிக்களித்தார்கள் என்றால். யானையை அவர்கள் விரும்பினாலும் யானைக்கு தலைமை தாங்குபவரை விரும்பவில்லை.’
நாம் எமது புதிய கூட்டணியின் சின்னமாக தொலைபேசியை நேற்றைய தினம் அறிவித்தோம். எனவே இம்முறை தொலைபேசி சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். நாம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்