உலகம்

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்

(UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன். இந்த நடவடிக்கையின் 50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்’’ என்றார்.

மேலும் உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,043 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

அறிகுறிகள் இன்றி 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

அமெரிக்காவின் நன்றியற்றதன்மைக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது – இம்ரான்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு