உள்நாடு

ரணிலின் விசேட அறிக்கை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது.

இந்தப் பின்னணியில், கொரோனா வைரஸ்களை நிவர்த்தி செய்வதற்காக இலங்கையில் உள்ள தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளுடன் கலந்தாலோசித்து முறையான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை சிறந்த செயற்பாடாக இருந்த போதும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

கடந்த 5 மாதங்களில் 800 முறைப்பாடுகள்

இராணுவ அதிகாரிகள் 14,617 பேருக்கு பதவி உயர்வு