விளையாட்டு

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

(UTV|ஜப்பான்) – கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் தீபம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது இந் நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். முதல் நபராக கிரீஸ் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார். அது வருகிற 19-ந்தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

Related posts

T20 WorldCup : சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

இந்தியா அணி வெற்றி