உள்நாடு

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

(UTV|கொழும்பு ) – ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(12) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கையொப்பமிட்ட கடிதமொன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு மாறாக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்

7 நாட்களுக்குப்பின் திறக்கப்பட்ட பதுளை வீதி!

ச.தொ.ச.வில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

editor