உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல்

(UTV|கொழும்பு) – அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களிலும் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு என்பனவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கு பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை 22 மாவட்ட செயலகங்களிலும் வேட்புமனு கையேற்பு இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

கிண்ணியா படகு விபத்து : 07 ஆவது மரணம் பதிவு