உள்நாடு

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதை காலம் தாழ்த்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

Related posts

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு