உள்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம்

(UTV|கொழும்பு)- தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களை கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வருவதை கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் இன்று(10) ஈடுபட்டனர்.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்களை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கவுள்ள நிலையில் பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த இன்று நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

Related posts

இன்றும் சில மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ : நீட்டித்த அதிவிசேட வர்த்தமானி