உலகம்

5 ஜி ரோபோக்களுடன் கொரோனா வைரஸ் வைத்தியசாலை

(UTV|கொழும்பு)– சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவைத் தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தாக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா வைரஸ் பருவகால தொற்றாக மாற்றமடையலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த நிலைமையை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிஉயர் தொழில் நுட்பங்களுடன் கூடிய வைத்தியசாலையொன்றை சீனா நிர்மாணித்துள்ளது.

இந்த வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான குறுக்கு நோய்த்தொற்றைத் தடுக்க உதவும் வகையில் 5 ஜி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆறு வகையான ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த இந்த ரோபோக்கள் நோயாளிகளின் வெப்பநிலையைப் பரிசோதித்தல், அவர்களுக்கு உணவு வழங்குதல், கண்காணித்தல் மற்றும் வைத்தியசாலை பகுதிகளை கிருமி நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இவ்ரோபோக்களின் உதவியுடன் நோயாளிகளை அணுகாமலே நோயாளிகள் பற்றிய தகவல்களை வைத்தியர்கள் தொலைவிலிருந்து பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர்

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா அரசு தீர்மானம்