உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவையிடம் இருந்து விசேட கோரிக்கை

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 என இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்துள்ளன.

அதற்கமைய இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து கட்டார் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென்கொரியா, மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

கட்டார் இராஜ்ஜியத்தின் குறித்த தீர்மானத்திற்கு ஒரு விமான நிறுவனமாக இணங்க வேண்டியுள்ளதாகவும் அதனால் தமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக கவலை வெளியிடுவதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை – சிவப்பு எச்சரிக்கை

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று