(UTV|கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 32 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி உலக சந்தையில் மசகு எண்ணை பீப்பாய் ஒன்றின் விலை 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதுடன் இன்றைய தினத்துடன் ஒப்பிடும் போது அது 27 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய மசகு எண்ணையின் விலை 50 டொலர்களாக நிலவியதுடன் இன்றைய நாளுடன் ஒப்பிடும் போது அதன் விலை 32 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே நாளில் மசகு எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
கொரனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் மசகு எண்ணைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இவ்வாறான வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகியுள்ளது.
இதேவேளை மசகு எண்ணை உற்பத்தியை குறைக்குமாறு அண்மையில் ஒபேக் அமைப்பு பரிந்துரைத்திருந்த நிலையில் அந்த தீர்மானத்தை பிற்போடுமாறு ரஸ்யா கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.