(UTVNEWS | COLOMBO) –அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத் திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடள், 2 ஆயிரம் மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ளும்வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.