உள்நாடு

பொதுமக்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை அருந்த அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டின் சில பாகங்களில் நாளை(08) அதியுயர் வெப்பநிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனாராகலை மாவட்டங்களிலும் இவ்வாறு அதியுயர் வெப்பநிலை நிலவக்கூடும் என குறித்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், சுகாதாரத் துறையினரின் முன்னறிவித்தலுக்கு அமைய, அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, அதிக நீரை அருந்துவதுடன், கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக, பொதுமக்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை அருந்த வேண்டும் என மருத்துவ நிபுணர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – இம்ரான் எம்.பி

editor

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு