(UTV|கொழும்பு) – மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(06) இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவிற்கு மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.