உள்நாடு

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

(UTV|கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இன்று முற்பகல் (06) இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.டி.என்.இக்பால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத் தொகுதியில், பாலர் பாடசாலை மற்றும் நூலகம் உள்ளிட்ட இன்னோரன்ன செயற்திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை