உலகம்

சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

(UTV|சீனா) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இத்தாலியில் இதுவரையில் 148 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளதுடன், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 92 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரையில் 115 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி!

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு