கேளிக்கை

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு கேள்விக்குறி

(UTV|இந்தியா) – தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில படப்பிடிப்புகளை இரத்து செய்து விட்டு ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

(VIDEO)-ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மார்வெல் Anthem வெளியானது…

விமர்சனங்களுக்கு சூர்யா கொடுத்த பதிலடி

விஷால் – அனிஷா திருமண திகதி அறிவிப்பு